ABOUT US

மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேச சபை நிர்வாக எல்லையில் அமைந்துள்ளதும் சுமார் 4,185 பேர் வசிக்கின்றதும் 709குடும்பங்கள 652 வீடுகளை (அண்ணளவாக- கடைசியாக (2009 ஆம் ஆண்டு) கிராம சேவகர் மூலம் நடாத்தப்பட்ட கணிப்பின் படி) உள்ளடக்கியதும் 100% முஸ்லிம்களைக் கொண்டதும, ஓகொடபொல, உடுகொடை, குரவலான போன்ற சிற்றூர்களை அயற் கிராமங்களாகக் கொண்டதுமான செழிப்புமிகு கிராமமே கஹட்டோவிட்ட ஆகும்.

எமதூரின் கல்வி நிலையைப் பொறுத்தமட்டில் கம்பஹா மாவட்டத்தின் அதி உன்னதமான கல்வியல் வரலாற்றுப் பின்னணியை எமது கிராமம் தன்னகத்தே கொண்டு வீறுநடை போடுகின்றது எனலாம்.

ஆரம்பம்/ தோற்றம்

இவ்வாறானதொரு வரலாற்றுப் பிண்ணனியைக் கொண்ட எமதூரில் பெண்களுக்கான / மாணவிகளுக்கான தனியானதொரு அதிலும் முக்கியமாக மார்க்கக் கல்வியை வழங்குவது தொடர்பில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் இயங்கக்கூடிய ஒரு நிறுவனம் / கல்லூரி இல்லாததன் குறையை நிவர்த்தி செய்யும்முகமாக இந்தக் கல்லூரி 23/01/2008, புதன்கிழமை (ஹிஜ்ரி 1429, முஹர்ரம் பிறை 14) கஹட்டோவிட்ட இல 28,B, என்ற முகவரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கல்லூரியின் உத்தியோகபூர்வ கற்றல் செயற்பாடுகள் 01/05/2008 வியாழக்கிழமை இல 35/B, கஹட்டோவிட்ட என்ற முகவரியில் தென்னிந்தியா காயல் பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் பெண்கள் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்-ஹாபிழ் H.A. அஹ்மத் அப்துல் காதிர் (மஹ்லரி) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பின்னர் 28/B/02 என்ற முகவரியில் அமைந்துள்ள கல்லூரிக்கான நிரந்தரக் கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் 20/12/2010 ( ஹிஜ்ரி 1432 முஹர்ரம் 12) தொடக்கம் இயங்கி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

1. தூர நோக்கு (VISION):

‘அகில இலங்கையில் “அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் பெண்கள் சமூகத்தின் விடிவுக்காக உழைக்கக்கூடிய ஆலிமாக்களை உருவாக்கும் முன்னோடித் தளமாக அல்லது கல்லூரியாக விளங்குதல்.’

2. இலக்கு (MISSION)

“கம்பஹா மாவட்டத்தில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்கொள்கையினை பரப்புவதிலும், அதனை நிலை நாட்டுவதற்காக பாடுபடுவதிலும், மற்றயவர்களை, குறிப்பாக இளம் தலைமுறையினரை அதன்பால் உறுதிப்படுத்துவது. அதாவதுஅஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்கொள்கையில் வாழவைப்பது தொடர்பில் உழைக்கக்கூடிய ஆலிமாக்களை உருவாக்குதல்”

3. நோக்கங்கள்(OBJECTIVES)

3.1. பிரதான நோக்கம்

சமுகத்தின் எல்லாத் துறைகளிலும் துணை நிற்கக்கூடிய தகைமைகளையுடைய பெண் சமுகம் ஒன்றை கட்டி எழுப்புவதக்காக வேண்டி உழைக்கக்கூடிய ஆலிமாக்களை உருவாக்கும் நோக்கில் 3-4 வருடங்களைக்கொண்டதான “ஆலிமா” பாடநெறியினை நடாத்துதல்

3.2. ஏனைய நோக்கங்கள்

3.2.1. பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு குறுகிய கால பாடநெறிகளை நடாத்துதல்.உதாரணம் : பகுதிநேர ஹிப்ழு வகுப்புக்கள்

3.2.2. சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் பெண்களையும் பாடசாலைக் கல்வியை முடித்த மாணவிகளையும் இலக்காகக்கொண்டு வாராந்த, மாதாந்த நிகழ்ச்சிகளை நடாத்துதல். உதாரணம் : வாராந்த பெண்கள் மஜ்லிஸ் (முஅஸ்கருர் ரஹ்மான் பெண்கள் ஒன்றியம்)

3.2.3. ஆலிமா படநெறியினை தொடர்கின்ற மாணவிகளை அரசாங்க பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதன் மூலம் (3-4 வருடங்களுக்கு பின்னர்) “ஆலிமா” தகைமைகளை பூரணப்படுத்தப்படும் போது அரசாங்கபரீட்சை தகைமைகளையும் அவர்களுக்கு பெற்று கொடுத்தல்.உதாரணம் : க.பொ.த.(உ/த) பரீட்சை.

3.2.4.மாணவிகளுக்கு காலத்திக்கேற்றதொழிநுட்ப, தொழில்சார்அறிவினை வழங்குதல்.

 

 

The our Village is Kahatowita, which is situated under Gampaha district of Western province of Sri Lanka with 100% muslims and both Udugoda & Ogodapola are the villages beside it.

When talking about the educational level of our village it is in higher rank comparing with other village in and around Kahatowita.

INCEPTION OF THE COLLEGE (BRIEF NOTE):

Our college has established on Wednesday, the 23rd of January 2008 (Hijri 1429, Muharram-14) at 28/B, Kahatowita with the solution to the long outstanding expectation of the society, that is of not having even a single institution or college which provide Islamic higher studies to the girls / ladies under the policies of Ahlus Sunnah Wal Jamath.

However, the activities of the college has been officially started on Thursday, the 01st of May 2008 (Hijri 1429, Rabi Ulil Aahir-25) at a house belonging to Alhaj M.U.M. Rusdhy (No 35/A, Kahatowita) by the founder of Muaskarur Rahman Ladies Arabic of South India, Moulana Moulavi Alhaj Al Hafil H.A. Ahmadh Abdhul Cader (Mahlari).

Further, the present activities of the college have been conducted at its own building situated at MR 28/B/2, Kahatowita from on Monday, the 20th of December 2010 (Hijri 1432, Muharram-12).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *